2019ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி 12 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலகளவில் தங்கம் பயன்பாட்டில் இரண்டாவது மிகப் பெரிய நாடாக உள்ள இந்தியா, தனது இறக்குமதிச் செலவுகளைக் குறைக்க முயன்று வருகிறது. ஆனால் ஆபரணங்கள் தயாரிப்புக்கு அதிகளவு தங்கம் தேவைப்படுவதாலும், தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகமாக இருப்பதாலும் இறக்குமதி தொடர்ந்து அதிகரித்து வந்தது.
எனினும், 2019ஆம் ஆண்டில் சர்வதேசச் சந்தையில் தங்கம் விலை உச்சத்திலேயே இருந்ததால் இந்தியாவின் தங்கம் இறக்குமதி 12 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் மிகப் பெரிய சரிவாகும். 2019ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் தங்கம் விலை உயர்ந்த நிலையில், இந்தியாவின் இறக்குமதியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.