இலங்கை: பேருந்து கவிழ்ந்து விபத்து... இதுவரை 12 பேர் பலி, 40க்கும் மேற்பட்டோர் படுகாயம்

பசறை பகுதியிலிருந்து மடுல்சீமை வரை செல்லும் பிரதான சாலையின் 6ம் கட்டப் பகுதியில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது.


இலங்கையில் நடந்த பேருந்து விபத்தில் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளது பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.


ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தை அடுத்த பசறை பகுதியில் இன்று மாலை பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது.

பசறை பகுதியிலிருந்து எக்கிராவ எனும் பகுதிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு பயணித்த அரசுப்பேருந்து, வளைவுப் பகுதியில் வந்தபோது சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது


இந்த விபத்தில் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள்வெளியாகி உள்ளன. மேலும் 40 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பசறை பகுதியிலிருந்து மடுல்சீமை வரை செல்லும் பிரதான சாலையின் 6ம் கட்டப் பகுதியில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது.