400 ரன் சாதனையை நழுவ விட்ட வார்னர்! இப்படி பண்ணிட்டீங்களே டிம் பெய்ன்!!

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 589 ரன்களுக்கு டிக்ளேர் செய்துள்ளது.


ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. நவம்பர் 21ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றிருந்த நிலையில், இரண்டாவது போட்டி பகலிரவு ஆட்டமாக அடிலெய்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது.


 


இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்யக் களமிறங்கியது. துவக்க வீரர் ஜோ பர்ன்ஸ் 4 ரன்களுக்கு வெளியேற, மூன்றாவதாகக் களம்கண்ட மார்னஸ் லபுசேன் டேவிட் வார்னருடன் இணைந்து அதிரடியாக விளையாடினார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 361 ரன்கள் சேர்த்த நிலையில் லபுசேன் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

 

பின்னர் வந்த ஸ்டீவ் ஸ்மித் 7000 ரன்கள் சாதனையைக் கடந்த கையோடு, 36 ரன்களுக்கு வெளியேறினார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த டேவிட் வார்னர் முச்சதம் அடித்து சாதனை படைத்தார். இதோடு பல்வேறு சாதனைகளை டேவிட் வார்னர் தகர்த்துள்ளார்.